பொது செய்தி

தமிழ்நாடு

முடி திருத்துவோருக்கு நிவாரண தொகை: மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

Added : மே 22, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகரிலுள்ள முடி திருத்துவோர், நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரண நிதியாக, 28.83 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த, 2,148 பேருக்கு தலா, 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி, முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளருக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம், இரு தவணையாக, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, நலவாரியத்தில் பதிவு பெறாத முடி திருத்தும் தொழிலாளருக்கும், நிவாரண தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநகரில், முடிதிருத்தும் தொழிலில் ஈடுபடும் பதிவு பெறாத தொழிலாளர், நிவாரண உதவி தொகை பெற, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில், மனுவாக விண்ணப்பிக்கலாம். அவற்றை ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை, உதவித்தொகைக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மனுவுடன், வங்கி கணக்கு புத்தக முன்புறம், ஆதார் அட்டை, முடி திருத்துவோர் நல சங்க உறுப்பினர் அடையாள அட்டை, கடைசியாக சந்தா தொகை செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X