பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டுச்சந்தைக்கு தடையால் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

ஓமலூர்: மாட்டுச்சந்தை செயல்படாததால், 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கிராம மக்கள் முடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர், எம்.செட்டிப்பட்டி அருகே, பெருமாள் கோவில் மாட்டுச்சந்தை பிரசித்தி பெற்றது. வெள்ளிதோறும் நடக்கும் சந்தைக்கு, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட, சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாடுகளை, வியாபாரிகள், விற்பனைக்கு கொண்டு வருவர். இதுதவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில வியாபாரிகள், நள்ளிரவே, சந்தைக்கு வந்துவிடுவர். மதியம் வரை நடக்கும் சந்தையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கும். ஊரடங்கால், கடந்த மார்ச், 25 முதல், மாட்டு சந்தைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால், வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன், போதிய மழையின்றி கால்நடைகளுக்கு தேவையான புல் இல்லாமல், உணவு வழங்கவும் முடியாமல், பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து, எம்.செட்டிப்பட்டி மாட்டு வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் அய்யனார் கூறியதாவது: எம்.செட்டிப்பட்டியில், 80 சதவீதம் பேர் மாட்டுச்சந்தையையே தொழிலாக வைத்துள்ளனர். அதில், 50 சதவிதம் பேர் சிறு வியாபாரிகளாகவும், சந்தை நடந்தால் தான் வருமானம் என்ற நிலையில் உள்ளனர். ஊரடங்கால், 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நசிவால், உரிய நிவாரணம் வழங்க, அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X