பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களை நிறுத்தி வசூல்: ஓய்வு ஏட்டுக்கு எச்சரிக்கை

Added : மே 22, 2020
Share
Advertisement

ஆத்தூர்: சரக்கு வாகனங்களை நிறுத்தி, வசூலில் ஈடுபட்ட, ஓய்வு பெற்ற ஏட்டை, டி.எஸ்.பி., எச்சரித்து அனுப்பினார். ஆத்தூர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 62. இவர், 2017, பிப்., 28ல், கெங்கவல்லி ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தபோது ஓய்வு பெற்றார். ஆனால், 2018ல், ஆத்தூர் அரசு மருத்துவமனை, புதுப்பேட்டை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில், சரக்கு வாகனங்களை நிறுத்தி வசூலில் ஈடுபட்டார். அப்போது, தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கியதால், அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, மாஜிஸ்திரேட் எச்சரித்து, ஜாமினில் விடுவித்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு, மீண்டும், ஆத்தூர் அரசு மருத்துவமனை முன், சரக்கு வாகனங்களை நிறுத்தி, வசூலில் ஈடுபட்டார். ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ, டவுன் போலீசார் அவரை பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, சிவலிங்கத்தின் குடும்பத்தினரை வரவழைத்த டி.எஸ்.பி., 'இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இருமுறை வழக்கு பதியப்பட்டுள்ளது. ஊரடங்கில், வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'என எச்சரித்து அனுப்பிவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X