பொது செய்தி

தமிழ்நாடு

50 சதவீத மானியத்தில் கோடை பயிர் விதைகள்

Added : மே 22, 2020
Share
Advertisement

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடியில், 50 சதவீத மானிய விலையில், கோடை பயிர் விதைகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து, மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குனர் மணிமேகலாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: எர்ணாபுரம், அ.தாழையூர், வைகுந்தம், கன்னந்தேரி, கண்டர்குலமாணிக்கம், நடுவனேரி, தப்பக்குட்டை, இடங்கணசாலை பிட் - 1, பிட் - 2 ஆகிய கிராம விவசாயிகளுக்கு, கோடை உழவு செய்ய மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில், பயறு வகை பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு, கொள்ளு ஆகிய விதைகளுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நிலக்கடலை தரணி, வி.ஆர்.ஐ., 8 ரக விதைகள், கிலோவுக்கு, 40 ரூபாய் மானியத்தில் விற்கப்படுகிறது. இத்துடன், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோயிம்(பயறு), ரைசோபியம்(நிலக்கடலை), உயிரியல் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ் ட்ரைக்கோ டெர்மா விரிடி ஆகியவையும், 50 சதவீத மானியத்தில் விற்கப்படுகிறது. அதனால், விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தில், விவசாய குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. அதனால், மேற்கண்ட கிராம விவசாயிகள், உறுப்பினராக இணையலாம். இதன்மூலம், அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கி?ணப்புடன் மாத குழு கூட்டம் நடத்தி, பருவம் சார்ந்த தொழில்நுட்பம் குறித்து விவாதித்து, உரிய ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X