பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிக்கரை நடைபாதையை சீரமைக்கும் பணி துவக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, ராமக்காள் ஏரிக்கரை நடைபாதையில் இருந்த முட்புதர்களை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று துவங்கியது.
தர்மபுரியில் உள்ள ராமக்காள் ஏரியை, பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து பணியில், 67.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. நேற்று, இந்த ஏரிக்கரை பூங்காவில் பராமரிப்பில்லாமல் இருந்த, முட்புதர், கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி துவங்கியது. பூங்காவில், பழைய தர்மபுரி, மதிகோண்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயற்சி செய்து வந்தனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் யாரும் இங்கு வரவில்லை. ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டதால், மீண்டும் நடை பயிற்சி செய்ய மக்கள் வர துவங்கினர். இதனால், இந்த ஏரியை தூர்வாரும் பணிக்கு முன், இந்த ஏரிக்கரை நடைபாதையில் இருந்த, முட்புதர்களை அகற்றும் பணியில், நேற்று பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், திறக்கப்பட்டதிலிருந்து பராமரிப்பில்லாமல் உள்ள பூங்காவை, முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X