பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு முன்னேற்பாடு பணி தீவிரம்

Added : மே 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வு நடத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன், 1 முதல், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு துவங்கும் எனவும், அதற்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த தேர்வை தள்ளி வைக்க, பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை வரும் ஜூன், 15க்கு தள்ளி வைத்தது. மேலும், இந்த தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே எழுதலாம் என, அரசு அறிவித்தது. இதையடுத்து, ஜூன், 15ல் துவங்கும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தமுள்ள, 335 பள்ளிகளில், மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: அரசு உத்தரவு படி, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம், 335 பள்ளிகளில் நடக்கவுள்ளது. இப்பள்ளிகளில் உள்ள, தேர்வு அறைகளை கண்காணிக்க, 2,900 அறை கண்காணிப்பாளர்கள் உட்பட, பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X