பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனை செய்ய முடியாத நிலையில் சாலையோரம் கொட்டப்படும் சம்பங்கி பூ

Added : மே 22, 2020
Share
Advertisement
தர்மபுரி: சம்பங்கி பூக்களை விற்பனை செய்ய முடியாததால், அவற்றை சாலையில் கொட்டி விட்டுச் செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், செல்லியம்பட்டி, பாலக்கோடு, வெள்ளிசந்தை, மாரண்டஹள்ளி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பரவலாக சம்பங்கி பூ சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில்

தர்மபுரி: சம்பங்கி பூக்களை விற்பனை செய்ய முடியாததால், அவற்றை சாலையில் கொட்டி விட்டுச் செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், செல்லியம்பட்டி, பாலக்கோடு, வெள்ளிசந்தை, மாரண்டஹள்ளி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பரவலாக சம்பங்கி பூ சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்த பூக்கடைகள், தற்போது வரை செயல்படாமல் உள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் முழுவதும், பூ சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். சாகுபடி செய்த சம்பங்கி, பட்டன் ரோஸ், சாமந்தி உள்ளிட்ட பூக்களை பறித்து, விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர், செடிகளை வயல்களிலேயே உழவு செய்து, அவற்றை அழித்து வருகின்றனர். சம்பங்கி பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு வைத்தால், செடி வாடிவிடும். எனவே, செடிகளை காப்பாற்றும் வகையில், பூக்களை மட்டும் விவசாயிகள் பறித்து வருகின்றனர். இந்த செடி ஆறு மாதங்கள் வரை பூக்கும் என்பதால், இவ்வாறு செய்து வருகின்றனர். இருந்தாலும் பறித்த பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலையில், அவற்றை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அறிவித்துள்ள அரசு, பூ விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும், மேலும், பாதிக்கப்பட்டுள்ள பூ சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X