பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனை பட்டாவை அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சூரநத்தத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள, மாரியம்மன் கோவிலை சுற்றி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 25 சென்ட் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன், இருளர் இனத்தை சேர்ந்த, 25 பேருக்கு தலா, ஒரு சென்ட் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வருவாய்துறையினர் நிலம் அளவீடு செய்ய சென்றனர். இதற்கு, அக்கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர், மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது சுவாமி ஊர்வலம், இந்த புறம்போக்கு நிலம் வழியாக சென்று வருகிறது. மேலும், இறந்தவர்களின் உடலை அடக்க செய்ய மயானத்துக்கு இந்த வழியாக எடுத்து செல்கிறோம். எனவே, சுவாமி ஊர்வலம் செல்ல பாதை வசதி செய்துவிட்டு, நிலத்தை அளக்க வேண்டும் என, எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நிலத்தை அளவீடு செய்யாமல், அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X