சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு 'சீல்'

Added : மே 22, 2020
Share

அரூர்: அரூரில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய, தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு படிக்கும் வெளிமாவட்ட மற்றும் உள்ளூர் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு, பொதுமக்களிடமிருந்து புகார்கள் சென்றன. இதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு அரூரில் உள்ள, தனியாருக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற சப் - கலெக்டர் பிரதாப், அங்கு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்ததை உறுதி செய்தார். தொடர்ந்து, அவரது உத்தரவுப்படி, பள்ளிக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர். இது குறித்து சப் - கலெக்டர் பிரதாப் கூறுகையில், ''அரசு உத்தரவுப்படி, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. மேலும், சில ஆசிரியர்கள் வீட்டில் 'டியூசன்' நடத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X