சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரி அடித்துக்கொலை: நண்பர்கள் ஐந்து பேர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், வியாபாரியை கொலை செய்த, அவரது நண்பர்கள் ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கூட்டாறுவை சேர்ந்தவர் கார்மேகம், 35; இவர், டாடா ஏஸ் வாகனத்தில் பழம் மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட அவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சதீஷ்குமார், 32, மந்திகுளாம்பட்டி காந்திநகர் சந்துரு, 29, ஆட்டோ டிரைவர், அஜீத்குமார், 22, சஞ்சீவன், 29, செங்கல்மேடு குபேந்திரன், 22, கல்லடிப்பட்டி சக்திவேல், 29, ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, கோரையாறு வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது, குபேந்திரனின் மொபைல்போனை கார்மேகம் எடுத்துக் கொண்டதாக கூறி, அவரை, சந்துரு, அஜீத் ஆகியோர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில், படுகாயமடைந்த கார்மேகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, கார்மேகத்தின் மனைவி நித்யா, 28, புகார்படி, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சந்துரு, அஜீத்குமார், குபேந்திரன், சஞ்சீவன், சக்திவேல் ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X