துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும்

Added : மே 22, 2020
Share
Advertisement

அரூர்: வேடகட்டமடுவில் பூட்டியுள்ள துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை அடுத்த வேடகட்டமடுவு பஞ்.,ல், ஆண்டியூர், மேல்செங்கப்பாடி, கீழ்செங்கப்பாடி, கருங்கல்பாடி, டி.அம்மாப்பேட்டை, தாம்பல், நண்டுபள்ளம், ஆலம்பாடி உட்பட, 16 கிராமங்கள் உள்ளன. தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய, மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமங்களுக்கு போதியளவில் சாலை மற்றும் போக்குவரத்து வசதி கிடையாது. தென்பெண்ணையாற்றை சுற்றி வனப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி மக்களின் மருத்துவ வசதிக்காக கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், வேடகட்டமடுவில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த சுகாதார நிலையம், தற்போது, முறையாக திறக்கப்படாமல் பூட்டியுள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், 15 கி.மீ., தூரத்தில் உள்ள தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும், எனவே, துணை சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X