பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூரிலிருந்து வந்தோர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

Added : மே 22, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், கொரோனா தொற்று தடுப்பு பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்தோ, வெளி மாவட்டத்திலிருந்தோ, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருவோர் மற்றும் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கு, இந்த மாவட்டத்தில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், கொரோனா தொற்று தடுப்பு பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்தோ, வெளி மாவட்டத்திலிருந்தோ, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருவோர் மற்றும் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கு, இந்த மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்துக்கு சென்று திரும்பியோர், விபரத்தை மக்கள் உடனடியாக, 04343- 230044, 04343 - 234444 மற்றும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமும் தெரிவிக்க வேண்டும். தற்போது வந்துள்ளவர்கள், தாங்களாகவே முன்வந்து கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவரவர் வீடுகளிலேயே, 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா தொற்று பரவாமல் இருக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X