பொது செய்தி

தமிழ்நாடு

1,600 உ.பி., தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் பயணம்

Added : மே 22, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: நாடு முழுவதும் வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பணியாற்றி வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று

கிருஷ்ணகிரி: நாடு முழுவதும் வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பணியாற்றி வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று ஓசூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு பெட்டியில், 80 பேர் வீதம், 20 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில், 1,600 பேர் நேற்று மதியம், 1:45 மணிக்கு புறப்பட்டனர். அவர்கள் அனைவரையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனைக்கு பிறகே, ரயிலில் ஏற அனுமதித்தனர். தொழிலாளர்களை, டி.ஆர்.ஓ., சாந்தி, ஓசூர் ஆர்.டி.ஓ., குமரேசன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒருவருக்கு, 920 ரூபாய் என, 1,600 பேருக்கு, 14 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இலவச ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், மூன்றுவேளை உணவு, தண்ணீர் பாட்டில், முகக்கவசம், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில், டி.எஸ்.பி., சங்கு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரயில் பெங்களூரு வழியாக, உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X