பொது செய்தி

தமிழ்நாடு

20 நாட்களுக்கு பிறகு கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து

Added : மே 22, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணைக்கு, 20 நாட்களுக்கு பிறகு நேற்று தண்ணீர் வந்தது. கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை கடந்த, 62 ஆண்டுகளில் முதல் முறையாக தண்ணீர் வரத்தின்றி வறண்டது. அணையில், தேங்கிய வண்டல் மண்ணை அணையிலிருந்து, 500 மீ., தள்ளி விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ள, அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக அணைப்பகுதியில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். அணையில், தண்ணீர் இல்லாத போதே தூர்வார, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், நேற்று அணையின் நீர்மட்டம், 40.67 அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அணைக்கு வந்த, 400 கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த, 20 நாட்களுக்கு பிறகு நேற்று கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 40 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில், 12.20 அடிக்கு மண் சேர்ந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களில், 4.2 அடிக்கு தண்ணீர் வந்துள்ளதால், நேற்று மதியம் அணை நீர்மட்டம், 16.50 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X