மந்தை எதிர்ப்பு சக்தியால் 7 மாதங்களில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்| India, with 82% of the population below 50, is best placed for herd immunity | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மந்தை எதிர்ப்பு சக்தியால் 7 மாதங்களில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (12)
Share
HerdImmunity, India, Population, CoronaVirus, ஹெர்டுஇம்யூனிட்டி, இந்தியா, கொரோனா, வைரஸ், மக்கள்தொகை, India, herd immunity, population, study,

புதுடில்லி: இந்தியா தனது மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரிடம் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்கி 7 மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தனது சமீபத்திய நேர்காணலில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்றார். கொரோனா வைரஸை தடுப்பூசி அல்லது மந்தை எதிர்ப்பு சக்தி மூலம் கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதில் மிகவும் நம்பிக்கையானது என்றால் அது தடுப்பூசி தான். ஆனால் அவை பயன்பாட்டுக்கு வர 12 முதல் 18 மாதங்கள் ஆகும். அப்படியே அவை பயன்பாட்டுக்கு வந்தாலும் உலகில் உள்ள 780 கோடி மக்களுக்கும் அதை கொண்டு சேர்க்க மற்றொரு 18 முதல் 24 மாதங்கள் ஆகும் என்கின்றனர்.


latest tamil newsஇந்த நிலையில் நோய் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் கொள்கைக்கான மையம் மற்றும் பிரிஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தங்கள் ஆய்வில், மந்தை எதிர்ப்பு சக்தி மூலம் இந்தியாவில் கொரோனாவை வேகமாக கட்டுப்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளனர். மந்தை எதிர்ப்பு சக்தி என்பது மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு வைரஸை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதாகும். மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் இந்தியா உள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்திய மக்கள் தொகையில் 82% பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் லேசான அறிகுறிகளே இருக்கும். இறப்பு விகிதம் 0.2% என்ற நிலையில் தான் இருக்கும். மற்றொரு 8% பேர் 50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் இறப்பு 0.4 முதல் 1% ஆக இருக்கும். 60 வயதிற்கு உட்பட்ட நபர்களை அவர்களின் இயல்பு வாழ்க்கையை தொடங்க ஊக்குவிப்பது அவர்களை வைரஸுக்கு ஆளாக்கும், அதில் 99.7%-க்கும் அதிகமானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அடைவார்கள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த யுக்தியை செயல்படுத்துவதில் ஒரு சிக்கல் என்னவென்றால், பெரும்பாலான முதியவர்கள் கூட்டுக் குடும்பங்களில் வாழ்கிறார்கள், எளிதில் அவர்களை தனிமைப்படுத்த முடியாது. எனவே முதியவர்கள் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கலாம் என்கின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X