பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் ரவுடி ஜானியை தேடி ஆந்திரா மாநில போலீசார் முகாம்

Added : மே 22, 2020
Share
Advertisement

வேலூர்: ரவுடி ஜானியை தேடி, ஆந்திரா மாநில போலீசார், வேலூரில் முகாமிட்டுள்ளனர். வேலூர், காட்பாடி அடுத்த வன்றந்தாங்கலை சேர்ந்தவர், ஜானி 35; ரவுடியான இவர் மீது, கொலை கடத்தல், பணம் பறிப்பு, செம்மரக்கட்டை கடத்தல் போன்ற, 54 வழக்குகள் உள்ளன. என்கவுன்டர் லிஸ்டில் உள்ள ஜானி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார். தற்போது அவர், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் இன்டர்நெட் போன் காலில் மிரட்டி பணம் பறித்து வருகிறார். அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஜானியை பிடிக்க, ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்ட தனிப்படை போலீசார், 12 பேர், நேற்று வேலூர் வந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆந்திரா மாநிலம், திருப்பதி, கடப்பா பகுதிகளிலிருந்து செம்மரக்கட்டைகள் வேலூர் வழியாக சென்னைக்கு கடத்தப்படுகின்றன. கடத்தல்காரர்களுக்கு ரவுடி ஜானி உதவியாக உள்ளார். கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கடந்த, 40 நாட்களில், 175 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ளன. எனவே, ரவுடி ஜானியை பிடித்தால் கடத்தல்காரர்களை பிடித்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X