பேச்சு போட்டியில் முதலிடம்: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சு போட்டியில் முதலிடம்: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

Added : மே 22, 2020
Share

திருச்சி: திருச்சி மாவட்ட போலீஸ் துறை சார்பில், கொரோனா ஊரடங்கு நேரத்தை, பயனுள்ளதாக கழிப்பது எப்படி என்பது குறித்த பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில், மணப்பாறை லெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவி தீபிகா முதல் பரிசு வென்றார். சென்னை மாணவி பவித்ரா, பெல் பாய்ஸ் பள்ளி மாணவர் வைத்தீஸ்வரன், அமிர்தா பள்ளி மாணவிஅக்?ஷயா ஆகியோர் முறையே இரண்டு, மூன்று, நான்காம் பரிசுகளை வென்றனர். சீனியர் பிரிவில், மணப்பாறை அரசுப்பள்ளி மாணவர் பிரவீன் முதல் பரிசு வென்றார். ஆர்.எஸ்.கே., பள்ளி மாணவி ஷபாஷல்சா பெல், இந்திரா கணேசன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சீத்தல், கே.கே.நகர் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளி மாணவி சுப்புலட்சுமி ஆகியோர் முறையே, இரண்டு, மூன்று, நான்காம் இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி., ஜியாவுல் ஹக் பரிசு வழங்கி பாராட்டினார். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, என்ரிச் அமைப்பு இயக்குனர் ஆஷா பர்சானா, இன்ஸ்பெக்டர் அஜீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X