பொது செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தில் கும்மியடித்த 'கூகுள் மேப்': நஷ்ட ஈடு கேட்டு போலீசில் புகார்

Added : மே 22, 2020
Share
Advertisement

மயிலாடுதுறை: 'கூகுள் மேப்' செயலியால் மனைவி, 'டார்ச்சர்' செய்வதால், அந்நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரக்கோரி, போலீசில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை லால்பகதூர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 50. இவர், மயிலாடுதுறை போலீசில் நேற்று அளித்த புகார், அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

புகாரில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை பெரிய கடை வீதியில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறேன். சில மாதங்களாக, என் மனைவி, கூகுள் மேப்பில் உள்ள, 'யுவர் டைம் லைன் ஆப்' செயலியில் மூழ்கியுள்ளார். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிப்பு அடைந்து வருகிறோம். கடந்த, 20ல், நான் செல்லாத இடங்களை எல்லாம், அந்த மேப் வரைபடமிட்டு காட்டுகிறது. இதனால், சந்தேகமும், குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளும் உருவாகின்றன. கூகுள் மேப்பில், சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்படும் போது, எங்களால் பதில் அளிக்க முடியவில்லை. இது குறித்து, குடும்ப உறவினர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை அணுகி, அறிவுரை, ஆலோசனை கூறியும், என் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. கூகுள் நிறுவனம், என் குடும்ப வாழ்வில், தொடர்ந்து துன்பம் அளித்து வருகிறது. அதற்கான பதிவுகளும் உள்ளன. எனவே, கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக்கு தீராத துயரத்தை அளித்த கூகுள் நிறுவனத்திடம் இருந்து, நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X