பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,500 கன அடியாக சரிவு

Added : மே 22, 2020
Share
Advertisement

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து வினாடிக்கு, 3,500 கன அடியாக சரிந்தது. தமிழக - கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3,500 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. நீர் வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லில் உள்ள ஐவர்பானி, ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட பகுதியில், ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் அளவும் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X