பொது செய்தி

தமிழ்நாடு

முடங்கியது விசைத்தறி ஜவுளி தொழில்: ரூ.3,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

சேலம்: ஊரடங்கால், விசைத்தறி ஜவுளி தொழில் முடங்கி, 3,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலை வாய்ப்பை இழந்து வாடும் தொழிலாளருக்கு, அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சிறு விசைத்தறி கைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர் சேவா சம்மேளன தலைவர் அப்பு செட்டியார் கூறியதாவது: ஊரடங்கால், மார்ச், 25 முதல், விசைத்தறி ஜவுளி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில், 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் மூடப்பட்டன. தமிழகம் முழுதும், 3,000 கோடி ரூபாய்க்கு மேல், தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 1,000 கோடி ரூபாய்க்கு மேலான ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன. இத்தொழிலில் ஈடுபட்ட, 30 லட்சத்துக்கு மேலான தொழிலாளர், வேலை இழந்து தவிக்கின்றனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி பட்டு நெசவு தொழிலாளருக்கு, அரசு சார்பில், 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம், விசைத்தறி தொழிலும் முடங்கியுள்ளதால், நலவாரியத்தில் பதிவு பெறாத, அந்த தொழிலாளருக்கும், அரசின், 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X