அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
தமிழகம், விபி_துரைசாமி, பாஜ, திமுக, துணைபொதுச்செயலர், VP Duraisamy, DMK deputy general secretary, DMK, deputy general secretary,  BJP, TN news, politics, Tamil Nadu

சென்னை: திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜ.,வில் இணைந்தார்.

'முரசொலி' அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே, தமிழக பா.ஜ., தலைவராக, முருகன் நியமிக்கப்பட்டார். அவரை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது. 'டிவி' ஒன்றுக்கு, துரைசாமி நேற்று (மே 21) அளித்த பேட்டியில், 'ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார்' என்ற கருத்தை தெரிவித்தார்.


latest tamil news



இதையடுத்து, துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி, கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், ''பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.,வில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர்,'' என்றார். இந்நிலையில், இன்று (மே 22) தமிழக பாஜ., தலைவர் முருகன் மற்றும் இல.கணேசன் முன்னிலையில் பாஜ.,வில் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
25-மே-202018:26:18 IST Report Abuse
S.Ganesan உண்மை. தமிழக பாஜக எச்சரிக்கையாக பதவி எதுவும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பல வருடங்களாக ஓடிய திமுக ரத்தமும் , குணமும் அவ்வளவு எளிதில் மாறிவிடாது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202010:38:35 IST Report Abuse
Girija இவர் ஆம்னி பஸ் மாதிரி திமுக அதிமுக என்று பேக் டு பேக் ட்ரிப் அடித்து இரண்டு முறை ராஜ்ய சபா எம் பி ஆகி , இரண்டு முறை ராசி புர தேர்தலில் தோற்று அப்படியும் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து பின்னர் அன்பழகன் திண்ணை காலியானதும் அதை எதிர் பார்த்து வால் அறுந்த நரியாகி, இப்போது ஜாதி அரசியில் அல்வா விநியோகம் செய்து "தூற்றிக்கொண்டே காசு சேர்த்துக்கொள்" ஏந்துகிற நாஞ்சில் சம்பத்தின் கொள்கையில் அமைதிப்படை சத்யராஜையும் மணிவண்ணனையும் தூக்கி சாப்பிட்டுவிடுவார். தமிழகத்தில் பாஜக விற்கு ராதாரவி, நமீதா, இவர் என்று வாலிப வயோதிகர்கள் கூட்டம் தான் சேருகிறது.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-மே-202010:30:38 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மனமார்ந்த வாழ்த்துக்கள் சாமி என்ற பெயருடன் இதனை நாள் அந்த கொடும் கூட்டத்தில் இருந்தது பெரும் தவறு .நீண்ட கால தலைவர் இங்கு வந்தது அந்த கூட்டத்துக்கு ..அடித்தான் . சொந்த சரக்கு இல்லாமல் பலநூறு கோடி கொடுத்து தேர்தலில் நிற்கபோகும் தலைக்கு பெரிய ஆப்பு . சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X