பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஆட்டோ, தமிழகம், தமிழகஅரசு, ஊரடங்கு, Tamil Nadu, TN govt, lockdown, lockdown relaxation, TN districts, TN news, curfew, travel ban, social distancing, corona in TN, chennai, TN fights corona, coronavirus, corona, covid-19, corona crisis, corona outbreak, autos

சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட போதும், தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது. ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். போராட்டமும் நடத்தினர்.


4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, சென்னையை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா வாகனங்களை 23ம்தேதி முதல் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

latest tamil news



இந்நிலையில், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தினமும் 3 முறை கிரிமி நாசினி தெளித்து தூய்மைபடுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-மே-202021:47:44 IST Report Abuse
karutthu ஆட்டோ வில் ஒருவர் தான் பயணிக்கவேண்டும் என்பது சரிஅல்ல கணவன் மனைவி இரண்டு பேர் பயணிக்க அனுமதிக்க வேண்டும் கட்டண விகிதங்கள் முறைப்படுத்த வேண்டும் .
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
22-மே-202018:53:23 IST Report Abuse
Rajas மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-மே-202017:21:04 IST Report Abuse
S. Narayanan சென்னை மக்களே ஆட்டோ வேண்டுமா? அது உங்கள் கையில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X