அமெரிக்காவில் 50% உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்: கொலம்பியா பல்கலை| US could have avoided 36,000 deaths if social distancing had been imposed a week earlier: Research | Dinamalar

'அமெரிக்காவில் 50% உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்': கொலம்பியா பல்கலை

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (8)
Share

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 15.8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.latest tamil newsகடந்த 3ம் தேதி வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில், தெரிவித்துள்ளதாவது:உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலைப் பெருந்தொற்றாக அறிவித்தபின்னும், மிகத் தாமதமாக மார்ச் 16ம் தேதி, பயணங்களைக் கட்டுப்படுத்துமாறு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால், மார்ச் 19ல் துவங்கி ஏப்ரல் 3 வரை, வெவ்வேறு தேதிகளில் ஒவ்வொரு அமெரிக்க மாகாணங்களும் ஊரடங்கை அறிவித்தன.


latest tamil newsஒரு வார காலத்துக்கு முன்னதாக ஊரடங்கை அறிவித்திருந்தால், 36 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதைத் தடுத்திருக்க முடியும். இதுவே இரண்டு வார காலத்துக்கு முன் ஊரடங்கை அமலாக்கியிருந்தால், 50 சதவீத மரணங்களைத் தடுத்திருக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கருத்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்களும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X