பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்தில் இசை வாத்தியங்களை வாசித்த 100 நாட்டுப்புற கலைஞர்கள்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
இசைக்கலைஞர்கள்,நிவாரணம், கொரோனா, ஊரடங்கு, கோரிக்கை, தூத்துக்குடி, கோவில்பட்டி,

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம் என ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வித கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை என்பதால் நாட்டுப்புறகலைஞர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுப்புறக்கலைஞர்களின் முக்கிய சீசன் காலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதரம் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது.

மற்ற துறைகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், ஒருவேளை உணவிற்கே கஷ்டமான சூழ்நிலையில் தங்களுடைய குடும்பம் உள்ளதாகவும், விழாவிற்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தினை திரும்ப கொடுக்கும் சூழ்நிலை உள்ளதால் அரசு தங்களின் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கடலையூர் சாலையில் ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாதஸ்வரக் கலைஞர் மாரியப்பன் தலைமையில் தங்கள் வாத்தியங்களை வாசித்து நூதன முறையில் அரசுக்கு தெரிவித்தனர். அரசு நிச்சயமாக உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று பல நகரங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்று கூடி இசை வாத்தியங்களை வாசித்தனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
22-மே-202016:44:08 IST Report Abuse
Thirumal Kumaresan கட்டாயம் அரசு உதவ வேண்டும்.யாருக்கு தேவையோ அவர்களை கண்டு உதவ வேண்டும்.சும்மா எல்லோருக்கும் பொத்தாம் பொதுவாக கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
22-மே-202014:35:36 IST Report Abuse
Rpalnivelu ஊரடங்கை ஏப்ரல்14 நாள் வரை மிகக் கடுமையாக பற்றி பின் ஊரடங்கை விலக்கியிருக்க வேண்டும். மக்களும் மாஸ்க், கையுறை போன்றவற்றை உபயோகித்திருந்தால் இத்தகைய பிரச்சனை வந்திருக்காது. Operation success patient dead கதையாகிவிட்டது.
Rate this:
Cancel
22-மே-202014:08:04 IST Report Abuse
ஆப்பு கொரோனா நிதின்னு குடுக்கறதைவுட இதுமாதிரி மக்களுக்கு நேரடியாகத் தரலாம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
22-மே-202017:04:28 IST Report Abuse
 Muruga Velதாருங்களேன் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X