பொது செய்தி

இந்தியா

வங்கத்தை புரட்டிப்போட்ட புயல்: ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார் பிரதமர் மோடி

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி ஹெ லிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டார். அவருடன் மாநில முதல்வர் மம்தா சென்றார். மே.வங்க புயலுக்கு நிவாரணமாக ரூ. ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும்.latest tamil news


அம்பன் புயல் மேற்கு வங்காளத்தை தாக்கி 72 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.


வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 17ம் தேதி தீவிர புயலாக மாறியது. அதி தீவிர புயலாக மாறிய அம்பான் வடக்கு மற்றும் -வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கத்தின் திஹா மற்றும் வங்கதேசத்தின், ஹத்தியா தீவுகள் இடையே, நேற்று முன்தினம மாலை கரையை கடந்தது.
சுமார் 4 மணி நேரம் கடக்க துவங்கிய இந் புயலால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இந்த புயலால் 72 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு லட்சம் கோடி சேதம் அடைந்தததாக முதல்வர் மம்தா அறிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில் இன்று ( 22 ம் தேதி ) காலை பிரதமர் மோடி கோல்கட்டா சென்றார். அவரை முதல்வர் மம்தா வரவேற்றார் .தொடர்ந்து இருவரும் ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் பிரதமர் மோடி பஸிரத் பகுதியில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


பிரதமர் மோடி பேட்டி


பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; மே.வங்க புயலுக்கு ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும். உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். துயரத்தை சந்தித்துள்ள இந்நேரத்தில் மே.வங்க மக்களுக்கு துணை நிற்போம். மேற்குவங்கத்தில் மின்சாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் பாதித் சேதத்தை சீரமைக்க மத்திய அரசு முழு உதவி செய்யும். மே.வங்கம், ஒடிசா புயலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களோடு மத்திய அரசு நிற்கும். ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
22-மே-202020:28:10 IST Report Abuse
mohan ..வெரி குட்..
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
22-மே-202019:34:19 IST Report Abuse
Tamilnesan இதில் ஐநூறு கோடி மம்தா கட்சியின் தேர்தல் நிதிக்கு ஒதுக்கி விடுவார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே.........
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-மே-202017:09:28 IST Report Abuse
S. Narayanan கொரோனாவைவிட மோசமா இருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X