பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 3 மண்டலத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று (மே 21) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால்
Chennai, CoronaVirus, Corporation, Raipur, Kodambakkam, Covid-19 cases, corona in Chennai, சென்னை, கொரோனா, வைரஸ், மண்டல வாரியாக

சென்னை: சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று (மே 21) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,795 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,062 பேர் குணமடைந்துள்ளனர், 68 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்றைய பாதிப்புகளில் புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


யார் வெளியே சென்றாலும் மாஸ்க் அணிய வேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது . மாஸ்க் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது .

latest tamil newsதமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 62.9 சதவீதமாக உள்ளது. நேற்றைய பாதிப்புகளில் ராயபுரம் மண்டலத்தில் 161 பேரும், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 57 பேரும், திரு.வி.க.நகரில் 56 பேரும், தண்டையார்பேட்டையில் 50 பேரும், கோடம்பாக்கம் 39 பேரும், வளசரவாக்கத்தில் 35 பேரும், அடையாறு 26 பேரும், அம்பத்தூரில் 24 பேரும், சோழிங்கநல்லூரில் 17 பேரும், மாதவரத்தில் 14 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மணலி மற்றும் திருவொற்றியூரில் தலா 7 பேரும், ஆலந்தூரில் 6 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டனர்.


latest tamil newsசென்னையில் மண்டல வாரியாக மொத்த பாதிப்பு:


ராயபுரம் - 1,699
கோடம்பாக்கம் - 1,231
திரு.வி.க.நகர் - 1,032
தேனாம்பேட்டை - 926
தண்டையார்பேட்டை - 823
அண்ணாநகர் - 719
வளசரவாக்கம் - 605
அடையாறு - 472
அம்பத்தூர் - 376
திருவொற்றியூர் - 228
மாதவரம் - 186
சோழிங்கநல்லூர் - 130
மணலி - 115
பெருங்குடி - 112
ஆலந்தூர் - 96

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K RAGHAVAN - chennai,இந்தியா
22-மே-202019:19:43 IST Report Abuse
K RAGHAVAN sir in this condition we don't want 10 exams in TN now we will have after all Schools res .
Rate this:
Cancel
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
22-மே-202018:42:26 IST Report Abuse
RAJI NATESAN what about mumbai why dont give such advice to your state
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
22-மே-202017:18:59 IST Report Abuse
Chandramoulli Tamilakathil Matra maavattankalil nilamai kattukkul ullathu. Sonnathai kettarkal. Nilamai sariyaaki makkal veliyil varukinranar. Ellam vannarapettai thhan kaaranam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X