பொது செய்தி

தமிழ்நாடு

604 வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

கரூர்: மூன்றாம் கட்டமாக, 604 வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம், புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
அதன் பின் அவர், கூறியதாவது: மாவட்டத்தில், 14 மாநிலங்களை சேர்ந்த, 7,779 நபர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களில், 2,802 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பதிவு செய்துள்ளனர். இதன்படி, இரண்டு கட்டங்களாக, 289 பேர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாம் கட்டமாக, 604 தொழிலாளர்களை, 16 பஸ்கள் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எஸ்.பி., பாண்டியராஜன், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரெங்கராஜன், போக்குவரத்துத்துறை மண்டல மேலாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X