பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க சமூக இடைவெளி அவசியம்; எஸ்.பி., அறிவுரை

Added : மே 22, 2020
Share
Advertisement

கரூர்: ''சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்,'' என, எஸ்.பி., பாண்டியராஜன் பேசினார்.
கரூர், வெண்ணைமலையில் சைக்கோ அறக்கட்டளை சார்பில், வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, எளிய மக்கள், 150 பேருக்கு இலவசமாக மளிகை பொருள்கள் வழங்கும் விழா நடந்தது. சைக்கோ அறக்கட்டளை இயக்குனர் கிறிஸ்து ராஜ் தலைமை வகித்தார். விழாவில், எஸ்.பி., பாண்டியராஜன் பேசியதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நமது நாட்டின் உணவு முறைகள், இயற்கையிலேயே மூலிகை நிறைந்ததாக இருப்பதால்தான் உயிரிழப்பு குறைவாக உள்ளது. நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க, முதலில் கை சுத்தம் அவசியம். அதாவது எங்கு சென்றாலும் கிருமி நாசினியை கையில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது கைகளை நன்கு கழுவுங்கள். சமூக இடைவெளியும், தன் சுத்தமும் இருந்தால் மட்டுமே கொரோனா வராமல் தடுக்க முடியும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து, பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், துணை இயக்குனர் பிலோராணி, ஒருங்கிணைப்பாளர் பிருந்தாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X