பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : மே 22, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் மாவட்டத்தில், 3,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி காது கேளாத, வாய் பேச முடியாத, கண்பார்வையற்ற, கைகால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 200 நபர்களுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் மூலம், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர், கூறினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவுவங்கித்தலைவர் காளியப்பன், ஆர்.டி.ஓ., சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X