பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் விரோதத்தை கைவிட கோரி டி.என்.பி.எல்., பாரதீய சங்கம் மனு

Added : மே 22, 2020
Share
Advertisement

கரூர்: ஊரடங்கு காலத்தில், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என, டி.என்.பி.எல்., பாரதீய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க செயல்தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில், கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கொரோன வைரஸ் தாக்குதல் காரணமாக, ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்தியபிரேதசம், உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் தொழிலாளர் நல சட்டம் சிலவற்றை தவிர பிற சட்டங்கள், மூன்று ஆண்டுகளுக்கு முடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கோவா, ஒடிசா மாநில அரசுகள், வேலை நேரத்தை, 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரமாக மாற்றியுள்ளது. ஊழியர்களின், ஒரு மாத சம்பளத்தை பிடிக்கும், கேரள அரசின் முடிவை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. ஆனால் கேரள அரசு அவசர சட்டம் பிறப்பித்து, ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை வலுக்கட்டாயமாக பிடித்தம் செய்துள்ளது. இதுபோல, மாநில அரசுகளால் கொண்டு வந்துள்ள, தொழிலாளர் சட்ட முடக்கம் மற்றும் அவசர சட்டங்களால் தொழிலாளர் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். கரூர் காகிதபுரம் டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாரபட்சமின்றி ஊதியம் வழங்க வேண்டும். இவர்களுக்கு, கிராஜிவிட்டி வழங்க ஆவனம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X