பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : மே 22, 2020
Share
Advertisement

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கரூர் கலெக்டர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். இதில், கொரோனா ஊரடங்கால் கடந்த, 55 நாட்களாக ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வா தாரத்தை இழந்துள்ளனர். இதனால், குடும்பத்துடன் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு, நிவாரணம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ கடன் தவணை செலுத்த, ஆறு மாதம் அவகாசம் வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X