கால்வாய் கழிவுநீர் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

Added : மே 22, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டம், கொளந்தானூர் சுற்றியுள்ள பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 1,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் பல ஆண்டுகளாக முறையாக சாக்கடை வசதி செய்யப்படவில்லை. இங்குள்ள சாக்கடை தூர்ந்து, மூட் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே தேங்கியுள்ளது. தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோடை மழை பெய்து வருகிறது. அந்த மழைநீரும், கழிவு நீருடன் சேர்ந்து பல இடங்களில் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீர் செல்ல வசதியாக சாக்கடையை தூர் வார வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X