ஊரடங்கை தளர்த்திய போதும் அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையிழப்பு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Lost Jobs, US, Lockdown, CoronaVirus, EMPLOYEES, EMPLOYMENT, CORONA, COVID-19, CORONA OUTBREAK, CORONA UPDATES, CORONA NEWS, CORONA CASES, LOCKDOWN, LOCKDOWN RELAXATION, அமெரிக்கா, ஊரடங்கு, தளர்வு, வேலையிழப்பு, தவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், வேலையிழந்தோர் எண்ணிக்கை வியாழன் நிலவரப்படி 4 கோடியை நெருங்கியுள்ளது.

கொரோனாவை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுத்துக்கொண்டுள்ளது. இத்தகைய நெருக்கடி நிலைக்கு காரணம் ஆரம்பக்கட்ட தகவல்களை சீனா மறைத்தது தான் என குற்றம்சாட்டி வருகிறார் டிரம்ப். தற்போது வரை உயிரிழப்புகள் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. ஆனால் உண்மையான உயிரிழப்புகள் அரசு புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்கின்றனர்.


latest tamil news


இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளதாக, உதவித் தொகை கோரி முன்னெப்போதும் இல்லாத வகையில் 3.86 கோடி பணியாளர்கள் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதால் 24 லட்சம் பேர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.


latest tamil news


இது பொருளாதாரம் முற்றிலும் அழிந்துள்ளதை காட்டுகிறது. தொற்று பாதிப்புகள் சரிந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் வேலைவாய்ப்பு சந்தைகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என தொழிலாளர் நலத்துறையினர் கூறுகின்றனர். அமெரிக்க வேலையின்மை மே அல்லது ஜூன் மாதங்களில் 20% முதல் 25% வரை உயரக்கூடும். இந்த எண்ணிக்கை 90 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் மந்தநிலையின் போது கடைசியாகக் காணப்பட்டது என்று பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-202020:38:07 IST Report Abuse
Bhaskaran ரெண்டு மாசமாக லஞ்சம் வாங்காமல் இருந்ததே பெரிய காரியம்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மே-202000:24:53 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்பத்திரப்பதிவுக்கு ஒரு மாசம் தாமதம், கொரோனாவாலே. ஒரு மாசம் ஒண்ணுமே தொரக்கல்லை, பதிவு செய்யலை, இருந்தாலும் மறுபடியும் E.C வாங்கியே ஆக வேண்டும்ன்னுட்டான். வாங்குறதுக்கு மறுபடியும் 1,500 ரூபா லஞ்சம். பதிவுக்கு எப்பவும் போல லஞ்சம்....
Rate this:
ravi - chennai,இந்தியா
23-மே-202008:25:05 IST Report Abuse
raviலஞ்சம் வாங்குபவர்கள் போஸ்ட்டரை எல்லா அரசு அலுவலகங்களிலும் வைத்தாலென்ன.....
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
22-மே-202019:03:28 IST Report Abuse
CHINTHATHIRAI எல்லோரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் ஓர் ஆண்டில் சரி செய்து விடலாம் . இனியாவது அரசு பணியில் உள்ளவர்கள் கையூட்டு வாங்காமல் பனி புரிய வேண்டும் .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மே-202000:29:46 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்நாய் வாலை நிமிர்த்த முடியாது. இந்த நாயிங்க லஞ்சத்தை நிறுத்தாது. நடுரோட்டில் வெச்சி யார் வேண்டுமானாலும் இவர்களை சுடலாம்ன்னு சட்டம் வந்தா எல்லாப்பயலும் செத்து கெடப்பானுங்க...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-மே-202017:00:01 IST Report Abuse
S. Narayanan பொருளாதாரம் செயற்பட மினிமம் பைவ் வருடங்கள் ஆகும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மே-202000:27:48 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்ஓ மை கடவுளே.. (அஞ்சு வருசத்துக்காக கடவுளை கூப்பிடல்லே. ஒன்னோட தமிழ்க் கொலைக்காக உதவிக்கு கடவுளை கூப்பிட்டேன்)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X