ஊரடங்கை தளர்த்திய போதும் அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையிழப்பு| US unemployment rises by 4 mn despite easing of COVID-19 lockdowns | Dinamalar

ஊரடங்கை தளர்த்திய போதும் அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையிழப்பு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (7)
Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், வேலையிழந்தோர் எண்ணிக்கை வியாழன் நிலவரப்படி 4 கோடியை நெருங்கியுள்ளது.கொரோனாவை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுத்துக்கொண்டுள்ளது. இத்தகைய நெருக்கடி நிலைக்கு காரணம் ஆரம்பக்கட்ட தகவல்களை சீனா மறைத்தது தான் என குற்றம்சாட்டி
Lost Jobs, US, Lockdown, CoronaVirus, EMPLOYEES, EMPLOYMENT, CORONA, COVID-19, CORONA OUTBREAK, CORONA UPDATES, CORONA NEWS, CORONA CASES, LOCKDOWN, LOCKDOWN RELAXATION, அமெரிக்கா, ஊரடங்கு, தளர்வு, வேலையிழப்பு, தவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், வேலையிழந்தோர் எண்ணிக்கை வியாழன் நிலவரப்படி 4 கோடியை நெருங்கியுள்ளது.

கொரோனாவை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுத்துக்கொண்டுள்ளது. இத்தகைய நெருக்கடி நிலைக்கு காரணம் ஆரம்பக்கட்ட தகவல்களை சீனா மறைத்தது தான் என குற்றம்சாட்டி வருகிறார் டிரம்ப். தற்போது வரை உயிரிழப்புகள் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. ஆனால் உண்மையான உயிரிழப்புகள் அரசு புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்கின்றனர்.


latest tamil news


இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளதாக, உதவித் தொகை கோரி முன்னெப்போதும் இல்லாத வகையில் 3.86 கோடி பணியாளர்கள் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதால் 24 லட்சம் பேர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.


latest tamil news


இது பொருளாதாரம் முற்றிலும் அழிந்துள்ளதை காட்டுகிறது. தொற்று பாதிப்புகள் சரிந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் வேலைவாய்ப்பு சந்தைகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என தொழிலாளர் நலத்துறையினர் கூறுகின்றனர். அமெரிக்க வேலையின்மை மே அல்லது ஜூன் மாதங்களில் 20% முதல் 25% வரை உயரக்கூடும். இந்த எண்ணிக்கை 90 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் மந்தநிலையின் போது கடைசியாகக் காணப்பட்டது என்று பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X