பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு மோகனூரில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : மே 22, 2020
Share
Advertisement

மோகனூர்: கிராமப்புறங்களில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்த, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மோகனூர் ஒன்றியத்தில் உள்ள, 25 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்பரேட்டர்கள், மருந்து அடிக்கும் மஸ்தூர்கள் என, மொத்தம், 220 பேருக்கு, சிறப்பு முகாம், மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஒன்றிய சேர்மன் சரஸ்வதி துவக்கி வைத்தார். மண்டல அலுவலர் லீலாகுமார், ராசிபாளையம் ஊராட்சி தலைவர் சுப்ரமணியம், சிறப்பு முகாமின் நோக்கம் குறித்து பேசினர். மருத்துவர்கள் நித்யா, ஜனனி, ?ஹமாவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை, சிறுநீர் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் காசநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜா விளக்கினார். ஏற்பாடுகளை, பி.டி.ஓ., குணாளன், வட்டார அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X