பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் வெட்டிய முட்செடிகள் உரமாக்க தூளாக்கி அகற்றம்

Added : மே 22, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம், கோனேரிப்பட்டி ஏரியில் வெட்டி முட்செடிகளை உரமாக்க தூளாக்கி அகற்றப்பட்டது. ராசிபுரத்தில் இருந்து, ஆத்தூர் செல்லும் சாலையில் நகராட்சி தொடங்கும் இடத்தில் கோனேரிப்பட்டி ஏரி உள்ளது. 25 ஏக்கரில் உள்ள இந்த ஏரிக்கு, போதமலையில் இருந்து வரும் ஓடை வழியாக மழைக் காலத்தில் தண்ணீர் வரும். இதன் மூலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில், உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அது மட்டுமின்றி மீன்களும் வளரும். கடந்த, 10 வருடங்களுக்கு மேலாக இங்கு சீமைக்கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்திருந்தது. அதையும் வெட்டும் பணி தொடங்கி, கொரோனா ஊரடங்கால் பாதியில் நின்றது. மழைக் காலத்தில், ஏரியில் குறிப்பிட்ட ஒருபகுதியை தவிர மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதில்லை. எனவே, 'ஏரியில் உள்ள மரங்களை அகற்றுவதுடன், ஏரியில் கழிவுநீர், கோழி கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும்' என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், முதல் கட்டமாக ஏரியில் வெட்டி காய வைக்கப்பட்டிருந்த முட்செடிகளை அகற்றும் பணி தொடங்கியது. டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள ஹார்வெஸ்டர் இயந்திரம், முட்செடிகளை உறிஞ்சி, உடனேயே தூளாக்கி விடுகிறது. இந்த மரத்தூளை உரமாக்க பயன்படுத்த முடியும். ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரியில் நேற்று இப்பணி தொடங்கியது. சில நாட்களில், இப்பகுதியில் உள்ள காய்ந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும் என, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X