பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் வருமானமின்றி தவிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் வருமானம் இல்லாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. உரிமையாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். தினமும் காலை, 6:00 முதல், காலை, 10:00 மணி வரை காய்கறிகள் வாங்க மட்டும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை, 10:00 மணிக்கு மேல் வளாகம் முழுதும் தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தப்பணி முடிய மதியம், 2:00 மணிக்கு ஆகிறது. கடும் கோடை வெயிலால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். கடந்த, இரு மாதங்களாக கடையை திறந்து தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து, ஆணையாளர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: காய்கறி வியாபாரிகள் தங்கள் பொருட்களை, விற்பனை நேரம் முடிந்ததும் பஸ் ஸ்டாண்ட் கடைகளின் முன், மூட்டை கட்டி வைத்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் கடையினர், காலை, 10:00 மணிக்கு மேல் திறந்து, இரவு, 7:00 மணி வரை வியாபாரம் செய்து கொள்ளலாம். கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். பஸ் போக்குவரத்து தொடங்கியதும் மார்க்கெட் முன்பிருந்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X