பொது செய்தி

தமிழ்நாடு

1,464 பீஹார் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல், கரூர் மாவட்டத்தில் பணியாற்றும், பீஹார் மாநில தொழிலாளர்கள், 1,464 பேர், சிறப்பு ரயில் மூலம், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பீஹார் மாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப, சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 பெட்டிகள் கொண்ட, இந்த ரயிலில், கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், 1,464 பேர் மட்டும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரயிலில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 860 பேரும், கரூர் மாவட்டத்தை சேர்நத, 604 பேரும் பீஹார் மாநிலம் செல்கின்றனர். அவர்களை ஏற்றி செல்லும் ரயில், நேற்று மாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. நாமக்கல் கலெக்டர் மெகராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.பி., அருளரசு, டி.ஆர்.ஓ., துர்காமூர்த்தி, ஆர்.டி.ஓ.,க்கள் கோட்டைக்குமார், மணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட்ட சிறப்பு ரயில், பீஹார் மாநிலம், ஷிவான், ஆஜிப்பூர், மூஜாப்பர்பூர், சமஸ்திபூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பீஹாருக்கு முதல் ரயில், மாலை புறப்பட்டு சென்றது. அதில், 1,464 பயணிகள் செல்கின்றனர். அதில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள், 150 பேர் மாணவர்கள். அதற்கான செலவை, தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். மாவட்டத்தில், ஏற்கனவே, அவர்கள் சொந்த முயற்சியில், நாங்கள் அனுப்பி வைத்தது என, 600 பேர், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தங்கள் மாநிலம் செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளவர்கள், 1,300 பேர் உள்ளனர். அவர்கள், பீஹார், ஒடிசா, கோல்கட்டா, மத்திய பிரதேசம், டில்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். இன்னும், ஒரு வாரம், இரண்டு வாரங்களில், அனுப்பி வைப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில், கடைசியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, ஒன்பது நாட்கள் ஆகிறது. இன்னும், ஐந்து நாட்களில், கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால், ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறும். இது வரை, வெளிமாநிலங்களில் இருந்து, நாமக்கல் மாவட்டத்துக்கு வந்தவர்கள், 1,000 பேர். அவர்களில், 700 பேர், கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளனர். இன்னும், 600 பேர் வரவேண்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X