பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கல்

Added : மே 22, 2020
Share
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி அமைச்சகத்தின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மக்களை காக்க, 'ஆரோக்கியம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவுப்படி, கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஊட்டச்சத்து மாத்திரைகள் மாவட்டங்கள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. ப.வேலூரில் நடந்த சிறப்பு முகாமில், ஹோமியோபதி மருத்துவர்கள் இலக்கியாராம், கலைச்செல்வி, ராஜகணேசன் ஆகியோர், தூய்மை பணியாளர்களுக்கு, 'ஆர்சனிக்கம் ஆல்பம்30' என்ற, மாத்திரைகளை வழங்கி, அவற்றை உட்கொள்வது குறித்து விளக்கமளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X