பொது செய்தி

தமிழ்நாடு

கோடையிலும் நிரம்பியிருக்கும் தொட்டிபாளையம் ஏரி

Added : மே 22, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: தொட்டிபாளையம் ஏரியில், கோடையிலும் தண்ணீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சில்லாங்காடு, தொட்டிபாளையம், மாம்பாளையம் மற்றும் பல பகுதிகளில் ஏரிகள், ஓடைகள் உள்ளன. கடந்தாண்டு ஆகஸ்டில், பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது, இதன் உபரி நீர், ஏரி மற்றும் ஒடையை வந்தடைந்தது. மேலும், பருவமழையும் பெய்ததால், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி காணப்பட்டன. கடந்த ஜனவரியில், வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. நான்கு மாதங்களாக மழையும் எதிர்பார்த்தளவு பெய்யவில்லை. தற்போது கோடைகாலமாக உள்ளதால், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி, ஓடைகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், தொட்டிபாளையம் ஏரியில் மட்டும் நீர் குறையாமல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X