நொறுங்கியது பாக்.,விமானம்:நுாற்றுக்கும் மேற்பட்டோர் பலி

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
 பாகிஸ்தான,  விமானம், விபத்து, 100 பேர், கதி என்ன ? crashed while landing , Karachi, Pakistan, passenger plane, airline, flight, passenger dead, Karachi, Lahore, rescue, plane crashes

கராச்சி : பாகிஸ்தானில், 107 பேருடன் பறந்த விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்ததில், நுாற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து, கராச்சிக்கு, 98 பயணியர் உட்பட 107 பேருடன், பி.ஐ.ஏ., எனப்படும், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம், மதியம் புறப்பட்டது, கராச்சி விமான நிலையத்தை, விமானம் நெருங்கியதும், அதில் கோளாறு எற்பட்டது.
இது பற்றி, கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த பைலட், விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் எனக் கூறினார்.

லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானம் தரையிறங்கும் முன் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 99 பேர் இருந்தனர். 97 பேர் இறந்தனர். பஞ்சாப் வங்கி தலைவர் ஸஃபர் மசூத் Zafar Masood உட்பட 2 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் இது பதிவாகியிருந்தது.


latest tamil news




இதையடுத்து, கராச்சி விமான நிலையத்தில், விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விமானம் தரையிறங்கிய போது, எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த பகுதியில் தீப்பிடித்தது. குடியிருப்புப் பகுதி என்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்வதிலும் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது.


latest tamil news




மீட்பு பணியில்,போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் விழுந்ததில், 8 - 10 வீடுகள் சேதடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் இருந்தவர்கள், இடிந்த வீடுகளில் இருந்தவர்களின் கதி தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதுவரை, நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில், கொரோனா பரவலால், ஒரு மாததத்துக்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
23-மே-202006:00:27 IST Report Abuse
Sathyanarayanan Subramanian விமான விபத்தின் காரணமாக உயிரிழந்த பாகிஸ்தான் பயணிகள் அனைவரும் சாந்தி அடைய அல்லா அருள் கிடைக்கும். இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு ,இந்தியா
23-மே-202003:55:22 IST Report Abuse
NicoleThomson கொடுமை
Rate this:
Cancel
anbu - Hamilton,நியூ சிலாந்து
23-மே-202002:03:10 IST Report Abuse
anbu ஆழ்ந்த இரங்கல்கள. அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் அன்பு, நியூ ஸிலண்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X