குடிமராமத்து பணிகளை பார்வையிட சிறப்பு அதிகாரிகள் நியமனம்| TN govt appoints 7 senior IAS officer to oversee civic engagement | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து பணிகளை பார்வையிட சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
சென்னை: குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க , சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேரை தமிழக அரசு நியமித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தவுகள்: ஏழு மாவட்டங்களில் நடக்கும் குடிமராமத்து பணிகளை கண்காணித்து, பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கும் வகையில் துரிதபடுத்துவதற்காக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள்
குடிமராமத்துபணிகள், தமிழக அரசு, ஐஏஎஸ்அதிகாரிகள், civic engagement, TN govt, IAS officer, IAS, AIADMK, Tamil Nadu, TN districts, TN news, TN

சென்னை: குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க , சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேரை தமிழக அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தவுகள்: ஏழு மாவட்டங்களில் நடக்கும் குடிமராமத்து பணிகளை கண்காணித்து, பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கும் வகையில் துரிதபடுத்துவதற்காக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

01. தஞ்சாவூர் - ககன்தீப்சிங்பேடி

02. திருவாரூர் - ராஜேஷ் லக்கானி

03. நாகப்பட்டினம் - சந்திரமோகன்

04. புதுக்கோட்டை - அபூர்வா

05. கரூர் - கோபால்

06. திருச்சி- கார்த்திக்

07. அரியலூர் - விஜயகுமார்


ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள் மாவட்டங்களுக்கு சென்று பணிகள் முடியும் வரை பார்வையிடுவார்கள். பணிகள் தொடர்பான அறிக்கையினை முதல்வர் அலுவுலகம், பொதுப்பணித்துறை முதன்மை செயலர், தலைமை செயலாளருக்கு அனுப்புவார்கள். சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக பொறுப்பேற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X