ஜி.டி.பி வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட்ட சீனா| China GDP: Beijing abandons 2020 economic growth target | Dinamalar

ஜி.டி.பி வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட்ட சீனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
GDP, China, Target, No Annual GDP, National People's Congress, economic growth, China GDP, Beijing, consumer price index, CPI, Li Keqiang, economy, china economy,  சீனா, ஜிடிபி, இலக்கு, கொரோனா, வைரஸ்

பெய்ஜிங்: கொரோனா தொற்றால் சீனா முதன்முறையாக இந்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் அரசு செலவினங்களை அதிகரிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.

சீனாவில் வருடாந்திர பார்லி., குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் லி கெக்கியாங் தனது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். 1990ல் இருந்து சீன அரசு ஒவ்வொரு ஆண்டும் இலக்குகளை வெளியிட்டு வரும் நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான இலக்கை நிர்ணயிக்காதது இதுவே முதல் தடவையாகும். வூஹானில் இருந்து பரவ துவங்கிய கொரோனா தொற்று காரணமாக முதல் காலாண்டில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக சுருங்கியது.


latest tamil news


சீன பிரதமர் லி கெக்கியாங் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‛இந்தாண்டு பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கவில்லை. உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மற்றும் வர்த்தக நிலைமை மிகவும் நிச்சயமற்றவையாக உள்ளது. சீனாவின் வளர்ச்சி சில கணிக்க முடியாத காரணிகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் உள்நாட்டு நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. வேலைவாய்ப்பு மீதான அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் நிதி அபாயங்களும் அதிகரித்து வருகின்றன' என்றும் அவர் எச்சரித்தார்.


latest tamil news


இந்தாண்டு 9 மில்லியனுக்கும் அதிகமான நகர்ப்புற வேலைகளை உருவாக்குவதற்கு சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 ல் நிர்ணயித்த குறைந்தது 11 மில்லியன் என்பதில் இருந்து, 2013க்கு பிறகு இது மிக குறைவான இலக்கு என லி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் உயர்மட்ட தலைவர்கள், அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஊக்கத்தை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதற்கிடையில் ஹாங்காங்கிற்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு அளிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது ஒரு சிறந்த சட்ட அமைப்பு மற்றும் அமலாக்க வழிமுறைகளை வழங்குமென லி கூறியுள்ளார். ஆனால் ஹாங்காங்கின் சுயாட்சியைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை கண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஹாங்காங் போராட்டகாரர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X