மத்திய அரசிடம் திட்டமில்லை: சோனியா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி : ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.வீடியோ கான்பரன்சிங் முறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே,
சோனியா, சோனியாகாந்தி, காங்கிரஸ், காங், காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்., தலைவர் சோனியா காந்தி, காங்.,தலைவர்சோனியா, ஊரடங்கு, புலம்பெயர்தொழிலாளர், மத்திய அரசு, பிரதமர், பிரதமர் அலுவலகம், அதிகாரம், பொருளாதார திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மயம், sonia, sonia gandhi, congress, cong, congress chief, sonia gandhi, pm, Pm office, lockdown, central government, union government, PMO, Prime Minister, Narendra Modi, Indi, curfew, Prime Minister's Office, stimulus package, opposition meet, politics, nationwide lockdown, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, lockdown extension

புதுடில்லி : ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் பொது செயலர் சீதாராம் யெச்சூரி, மஜத தலைவர் தேவகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil newsஇந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது:ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும், நாட்டின் அடிமட்டத்தில் வசிக்கும் 13 கோடி பேரை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் நகைச்சுவையாகிவிட்டது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாதல், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் குறித்து மத்திய அரசு பார்லிமென்டில் விவாதிக்கவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தவும் இல்லை. இது மத்திய அரசின் தன்னிச்சையான நடவடிக்கை. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மறந்துவிட்டது. பார்லிமென்ட் அல்லது நிலைகுழுக்கள் கூடுமா என்பது தகவல் ஏதும் இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், அம்பான் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
23-மே-202007:08:50 IST Report Abuse
natarajan s ஒரு பெரிய திட்டம் உள்ளது. கொரோனவுடன் இவரையும் நாடு கடத்தும் திட்டம் , அது செயல் பாட்டுக்கு வந்தால் நாடு எல்லா நோய்களில் இருந்தும் விடுபடும். உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நீதி இந்த நாட்டில் உள்ளது. எனக்கு என்ன தேவை என்பதை அந்நியர்தான் முடிவு செய்யும் நிலை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-மே-202023:08:04 IST Report Abuse
Vena Suna உங்கள் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் கோடிக்கணக்கில் மக்கள் உயிர் போயிருக்கும். மோடி ஆட்சினால் உயிர்கள் ஓரளவு தப்பிக்கின்றன.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-மே-202023:00:43 IST Report Abuse
Rajagopal ஊரடங்கிலிருந்து வெளியே வருவதற்குத் திட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்மையார் திஹார் செயலில் அடங்கி இருக்கும் திட்டம் எப்போது நிறைவேறும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X