பொது செய்தி

இந்தியா

ஊரடங்கினால் 68 ஆயிரம் உயிரிழப்புகளை தவிர்த்துள்ள இந்தியா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Empowered Group 1, VK Paul, Lockdown, India, Avoided, Death, CoronaVirus, NITI Aayog member, Ministry of Health, COVID-19 cases, corona death, corona, covid-19, corona outbreak, corona updates, new corona cases, corona spread, corona patients

புதுடில்லி: ஊரடங்கினால் 14 முதல் 29 லட்சம் கொரோனா பாதிப்புகளையும், 37 முதல் 68 ஆயிரம் உயிரழப்புகளையும் இந்தியா தவிர்த்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் வி.கே.பால் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழு தலைவர் வி.கே.பால் கூறியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால், கொரோனா வைரஸ் வழக்குகளின் வளர்ச்சி வேகத்திற்கு ஒரு பிரேக் போட முடிந்தது. ஊரடங்கினால் இறப்புகளின் வளர்ச்சி வீதமும் கணிசமாக குறைந்துவிட்டது. ஊரடங்கை செயல்படுத்த முடியாமல் அல்லது தாமதப்படுத்தி இருந்தால், பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கலாம். மேலும், ஊரடங்கு அமல்படுத்தியதால், இந்தியா சுமார் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பாதிப்புகளையும், 37 ஆயிரம் முதல் 68 ஆயிரம் உயிரிழப்புகளையும் தவிர்த்துள்ளது.


latest tamil news


தற்போது மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், டில்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளில் 80 சதவீத பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த மாநிலங்களில் 90 சதவீத பாதிப்புகள் 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளன, மீதமுள்ள 10 சதவீத பாதிப்புகள் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளன. நகரங்களை பொறுத்தவரையில், மும்பை, டில்லி, சென்னை, ஆமதாபாத், தானே, புனே, இந்தூர், கோல்கட்டா, ஐதராபாத் மற்றும் அவுரங்காபாத் ஆகிய 10 நகரங்களில் சுமார் 70 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
23-மே-202001:02:18 IST Report Abuse
Abbavi Tamilan ஆனால் திட்டமிடாத இந்த ஊரடங்கினால் கோடி கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு இருக்கிறது
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
22-மே-202021:37:18 IST Report Abuse
Krishna True-Much More Possible
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-மே-202021:25:28 IST Report Abuse
A.George Alphonse பிறகு எதற்கு ரயில்,விமான போக்குவரத்தை ஊரங்கிற்கு முன்பே தொடங்கி காரோண வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆட இந்த அரசு வழிசெய்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X