சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 22, 2020
Share
Advertisement

'காவலன்' கதர்

இந்தியாவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கி.மு 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பொருட்களில் களிமண், இரும்பால் செய்யப்பட்ட தக்ளியும் (பஞ்சில் இருந்து, நுால் நுாற்க பயன்படுவது) இடம் பெற்றுள்ளது. உற்பத்தி முதல் நுகர்வு வரை எந்த விதத்திலும் சுற்றுச் சூழலைப் பாதிக்காத பொருளாக கதர் துணி உள்ளது. இது மண்ணில் எளிதில் மட்கும் தன்மை கொண்டது. கதர் துணியை வாங்குவதன் மூலம், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்றலாம். கதரில், தோலுக்கு பாதிப்பைத் தராத இயற்கைச் சாயங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

தகவல் சுரங்கம்


மழைக் கால விரதம்



இந்திய துணைக் கண்டத்தில் மிக நீண்ட விரதமாக சதுர்மாத விரதம் உள்ளது. ஜூலை 2வது வாரம் தொடங்கும் இவ்விரதம் நவ., 2வது வாரம் வரை நீடிக்கிறது. மழைக்காலத்தில் தான் சதுர்மாத விரதம் அனுசரிக்கப்படுகிறது. 'சஞ்சரிப்பவரே துறவி; பாயும் ஆறே துாயது' என்பது போல் துறவிகள் ஓர் இடத்தில் தங்காமல் பயணம் செய்து கொண்டே இருப்பர். பயண காலத்தில் விரதம் இருக்க மாட்டார்கள். மழைக் காலத்தில் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது இவ்விரதத்தை அனுசரிப்பர். இதனை இந்து, பவுத்த, சமண துறவிகள் அனுசரிக்கின்றனர். வடஇந்தியாவில் தான் இது பிரபலம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X