20,000 பேரை பணிநீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு| Nissan to slash 20,000 jobs amid loss | Dinamalar

20,000 பேரை பணிநீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (3)
Share

டோக்கியோ: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய ஜப்பான் கார் நிறுவனமான நிசான் முடிவு எடுத்துள்ளது.



latest tamil news



கொரோனாவால் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அந்த வரிசையில் ஜப்பான் நாட்டின் பிரபல கார் நிறுவனமான நிசான், வருவாய் இழப்பு காரணமாக பணியாளர்கள் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.


latest tamil news



ஜப்பானை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் வர்த்தக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த ஜூலை மாதம் 12,500 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது. இப்போது கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் விற்பனை அடியோடு நின்றதால் 20 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் முடிவுக்கு இந்நிறுவனம் வந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X