கத்தாரில் மேலும் 1,830 பேருக்கு கொரோனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

தோஹா : கத்தாரில் மேலும் 1,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்தாரிலும் நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (மே.,22) தெரிவித்ததாவது : கத்தாரில் கொரோனா அதிகரித்து, ஒரே நாளில் புதிதாக 1,830 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,481 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 2 பேர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.


latest tamil news



நோய் தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 605 பேர் குணமடைந்தனர். இதையொட்டி, கத்தாரில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,893 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32,569 ஆக உள்ளது. 175 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 5,160 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். இதனால் நாட்டில் மொத்தமாக 180, 642 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X