அரசின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் ; விவசாயிகளுக்கு தெலுங்கானா முதல்வர் வேண்டுகோள்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் விவசாயிகள் சாகுபடி செய்வது மற்றும் காலநிலைக்கு ஏற்ப அறுவடை செய்வது போன்ற பல நிலைகளில் மாநில அரசின் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயல்பட்டு பல நன்மைகளை பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.



latest tamil news



தெலுங்கானாவில் பிரகதிபவனில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் விவசாயிகள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் அமைச்சர்கள் உட்பட வேளாண் அதிகாரிகள், மாவட்ட விவசாய நலன் அதிகாரிகள், மாவட்ட ரைத்து பந்து தலைவர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அதில் விவசாயம் மற்றும் மாநிலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சந்தையில் மக்களுக்கு தேவைப்படும் பயிர்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் லாபம் பெற முடியும். வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என முதல்வர் சந்திரசேகர ராவ் சுட்டிக்காட்டினார்.


latest tamil news



அவர் மேலும் கூறியதாவது : தெலுங்கானாவில் விவசாயமே முதன்மை தொழிலாகும். டிஆர்எஸ் அரசின் நடவடிக்கையாலும், மாநிலத்தில் ஏற்கனவே உள்ள சிறந்த மண் வளங்கள் மற்றும் தகுந்த வெப்பநிலையால் நமது மாநிலம் விவசாய மாநிலமாக மாறி வருகிறது. விவசாயத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும். நல்ல தரமான பயிர்களை சாகுபடி செய்து உலகிற்கு தந்து லாபம் பெற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யாமல் , வேளாண் துறை அதிகாரிகளின் அறிவிப்புகளின் அடிப்படையில், பருவங்கள், காலநிலை மற்றும் பயிர் வகைகள், அதன் அளவு குறித்தும் வல்லுனர்கள் முடிவு செய்தனர்.
அவர்கள் கூறுவதற்கு ஏற்ற வகையிலும், அரசின் அறிவுறுத்தல்களின்படியும் செயல்பட்டால் புதிய பயிர் முறை விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிரின் வளர்ச்சி மற்றும் அதன் லாபம் அதிகமாக இருக்கும். மேலும் மாநிலத்தில் விவசாயிகளின் நலனுக்காக ரைத்து பந்து மற்றும் ரைத்து பிமா போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது பத்திரங்கள் மூலம் வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். அத்துடன் இந்த ஆண்டு ரைத்து பிமா திட்டங்கள் மூலம் பலியான விவசாயிகளின் குடும்பத்தார்களுக்கு உரிய நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நெல் வகைகளை தேர்ந்தெடுக்கும் போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சந்தையில் தேவையுள்ள இடங்களுக்கு தானியங்கள் முறையாக சென்றால் உரிய லாபம் கிடைக்கும். மாநில அரசும் மத்திய அரசும் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தும் திட்டங்களில் அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X