ராணுவத்திற்கான செலவை 6.6 சதவீதம் மட்டும் உயர்த்திய சீனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

பீஜிங்: ராணுவத்திற்கான செலவை இந்த ஆண்டு 6.6 சதவீதம் மட்டும் உயர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
\



latest tamil news



ராணுவ கொள்முதல், கட்டமைப்பு, மேம்பாடு போன்ற ராணுவ செலவினங்களில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் சீனா உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சீன பொருளாதாரம் 6.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தாலும். கடந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருந்த ராணுவ செலவின வளர்ச்சி இந்த ஆண்டு 0.9 சதவீதம் என்ற அளவிற்கு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வலிமையை காட்டும் அடையாளமாக ராணுவம் இருக்க வேண்டும் என்ற அதிபர் ஜி ஜின்பிங் கொள்கைக்கு ஏற்ப கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலிலும் ராணுவ செலவினம் கணிசமான அளவு உள்ளது.


latest tamil news



இதன்படி சீனாவின் 2020க்கான ராணுவ செலவு இந்திய மதிப்பில் ரூ 14.5 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 2020 ஆண்டுக்கான ராணுவ செலவினம் 4.7 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவின் ராணுவ செலவினம் இந்தியாவைப் போல 3 மடங்காக உள்ளது. ஆனால், உண்மையில் சீனாவுக்கான ராணுவச் செலவு பலமடங்கு இருக்கும் எனவும் அதை அந்நாடு வெளிக்காட்டுவதில்லை என்று துறை சார்ந்த வெளிநாட்டு வல்லநர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X